ராய்ச்சூரில், கொரோனா பரவலால் பள்ளிகள் மூடல்: வீடு தேடி சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறார்கள்

ராய்ச்சூரில் கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், வீடு தேடி சென்று அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்கள். அத்துடன் வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
ராய்ச்சூரில், கொரோனா பரவலால் பள்ளிகள் மூடல்: வீடு தேடி சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்துகிறார்கள்
Published on

ராய்ச்சூர்,

கொரோனா பீதியால் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் எப்போது தொடங்கும்? என்பதே தெரியாத நிலை உள்ளது. கர்நாடக அரசு செப்டம்பரில் பள்ளிகளை திறக்க ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால் பல்வேறு தரப்பினரும் ஒரு ஆண்டுக்கு பள்ளி, கல்லூரிகளை திறக்கக் கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனியார் பள்ளிகள் ஆன்-லைன் மூலம் வகுப்பு நடத்தி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கலபுரகியில் மாணவர்களின் வீடு தேடி சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். தற்போது கலபுரகியை தொடர்ந்து ராய்ச்சூரிலும் மாணவர்கள் வீடு தேடி சென்று அரசு பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

ராய்ச்சூர் அருகே உள்ளது குத்தரஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பீதி காரணமாக இந்த பள்ளி மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் வீடுகளில் உள்ளனர். இந்த நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகரப்பா தலைமையிலான ஆசிரியர்கள் தினமும் மாணவர்களுக்கு வீடு தேடி சென்று பாடம் நடத்தி வருகின்றனர். மேலும் வீட்டு பாடங்களையும் கொடுத்து வருகின்றனர்.

இது மட்டும் அல்லாமல் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கள் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும், அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஆசிரியர்கள் கேட்டு கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com