புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறப்பு

வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மீதம் 6 நாட்களும் முழுமையாக வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறப்பு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் 1-ல் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்தது. இது குறித்த அறிவிப்பை புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார்.

அதன்படி புதுச்சேரியில் இன்று 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் முடிக்கப்படாமல் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் முழு நேரமும் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு 9-ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com