கடல் சீற்றத்தால் கரையில் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது

பெரியதாழையில் கடல் சீற்றத்தால் கரையில் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
கடல் சீற்றத்தால் கரையில் இருந்த தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது
Published on

தட்டார்மடம்,

தென் மாவட்டங்களின் கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் இருக்கும் என்று இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே உள்ள பெரியதாழையில் நேற்று முன்தினம் இரவில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. அப்போது கடற்கரையில் இருந்த தடுப்பு சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. இதனால் ஊருக்குள் கடல்நீர் புகும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வசித்த மீனவ குடும்பத்தினர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் உதவி கலெக்டர் தங்கவேலு, சாத்தான்குளம் தாசில்தார் சேதுராமன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மீனவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், பெரியதாழையில் ரூ.25 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதற்காக ஊரின் கிழக்கு பகுதியில் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 200 மீட்டர் தூரமும், ஊரின் மேற்கு பகுதியில் கடற்கரையில் இருந்து கடலுக்குள் 800 மீட்டர் தூரமும் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது.கிழக்கு பகுதியில் குறைவான தூரமே தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு உள்ளதால், அங்கு கடல் அரிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கடற்கரையில் படகுகளை நிறுத்த முடியவில்லை. குடியிருப்பு பகுதியில் இருந்து 20 அடி வரையிலும் கடல் அரிப்பு ஏற்பட்டு விட்டது. எனவே, மேற்கு பகுதியில் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவுக்கு இணையாக கிழக்கு பகுதியிலும் தூண்டில் வளைவை உடனே நீட்டிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com