பழனி அருகே 2 மணல் குவாரிகளுக்கு ‘சீல்’ - சப்-கலெக்டர் நடவடிக்கை

பழனி அருகே, தரமற்ற முறையில் மணல் விற்ற 2 குவாரிகளுக்கு ‘சீல்’ வைத்து சப்-கலெக்டர் அருண்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பழனி அருகே 2 மணல் குவாரிகளுக்கு ‘சீல்’ - சப்-கலெக்டர் நடவடிக்கை
Published on

நெய்க்காரப்பட்டி,

திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் செயல்படும் மணல் குவாரிகளில், கல்குவாரிகளில் கிடைக்கும் எம்.சாண்டை மணலாக மாற்றி கட்டுமான பணிகளுக்காக விற்பனை செய்வதாக பழனி சப்-கலெக்டர் அருண்ராஜூக்கு புகார் வந்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களாக, பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் சப்-கலெக்டர் அருண்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதியில் தரமற்ற மணலை விற்ற மணல் குவாரிகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூர், சுக்கமநாயக்கன்பட்டி பகுதிகளில் செயல்படும் 2 மணல் குவாரிகளிலும் தரமற்ற மணல் கட்டுமான பணிக்காக விற்பனை செய்யப்படுவதாக சப்- கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து அந்த பகுதியில் நேற்று சப்-கலெக்டர் அருண்ராஜ் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது எம்.சாண்ட் மணலை தரமற்ற முறையில் மணலாக மாற்றி அந்த குவாரிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 2 குவாரிகளையும் பூட்டி சீல் வைக்க வருவாய்த்துறையினருக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி 2 குவாரிகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும், குவாரி உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக் கவும் அதிகாரிகளுக்கு சப்-கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் இதுகுறித்து சப்-கலெக்டர் கூறுகையில், பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கட்டிடங் களை கட்டும் பணியில் ஈடுபடுவோர் தரமான மணலை பயன்படுத்த வேண்டும். எம்.சாண்ட் கலக்கப்பட்ட மணலை யாராவது விற்பது தெரியவந்தால் உடனே எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com