ரகசியம் சொல்லட்டுமா?

நமது குடியரசு தினமான இன்று, உலகின் முதல் பதிவு திருமணம் நடந்த ரகசியத்தை நீங்கள் அறிவீர்களா?.
ரகசியம் சொல்லட்டுமா?
Published on

மது குடியரசு தினமான இன்று, உலகின் முதல் பதிவு திருமணம் நடந்த ரகசியத்தை நீங்கள் அறிவீர்களா?. ஆஸ்திரேலியாவின் பழங்குடியின பெண்ணான மரியா, இங்கிலாந்துக்காரரான ராபர்ட்டை திருமணம் செய்ததுதான் வரலாற்றில் பதிவாகிய முதல் கலப்புத் திருமணம்.

மரியா ஆஸ்திரேலியாவின் பழங்குடியினப் பெண். அவர் பழங்குடியின தலைவரான யாராமுன்டியின் மகள். 1814ம் ஆண்டு மரியா முதன் முதலாக பள்ளியில் சேர்க்கப்படுகிறார். 5 ஆண்டுகள் பள்ளியில் படித்த அவர், வகுப்பில் படித்த 20 பேரில் சிறந்த மாணவியாக தேர்வு செய்யப்பட்டார். அந்த பள்ளியில் மொத்தம் 100 ஐரோப்பிய மாணவர்கள் பயின்றது குறிப்பிடத்தக்கது.

1822ம் ஆண்டு டிக்கி என்பவருடன், மரியாவுக்கு திருமணம் நடந்தது. ஆனால் கணவர் சிறிது நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். 2 ஆண்டுகள் கழித்து மரியா மறுமணம் செய்தார். இங்கிலாந்திருந்து வந்த கூலித்தொழிலாளிகளில் ஒருவர் ராபர்ட் லாக். படிப்பறிவில்லாத அவர், மரியாவின் கீழ் தொழிலாளியாக வேலை செய்தபோது, அவர்களுக்குள் ஈர்ப்பு வந்தது. திருமணம் செய்து கொண்டனர்.

முதன் முதலில் பழங்குடியினரும், இங்கிலாந்து குடியுரிமை பெற்ற ஒருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டது வரலாற்றில் அதுவே முதல் முறை. பாராமட்டாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் 1824ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்த திருமணம் நடந்தது. அவர்களுக்கு 9 குழந்தைகள் பிறந்தார்கள். அவரது சகோதாரர்களிடம் இருந்த நிலத்தை, வாரிசு சொத்துரிமையின்படி கவர்னரிடம் முறையிட்டு தனது பங்கான 40 ஏக்கர் நிலத்தைப் பெற்றார். அது அவர்களின் வாரிசுகளுக்கு பேருதவியாக அமைந்தது. மரியாவின் வாழ்க்கை, கலப்புத் திருமணத்திற்கும், சொத்துரிமைக்கும் சரியான வரலாற்றுச் சான்று.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com