வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உயர்வை ரத்து செய்ய கோரி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க திரண்டு வந்த பொதுமக்கள்

வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உயர்வை ரத்து செய்ய கோரி காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் திரண்டனர்.
வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உயர்வை ரத்து செய்ய கோரி நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்க திரண்டு வந்த பொதுமக்கள்
Published on

காங்கேயம்,

காங்கேயம் நகராட்சி நிர்வாகம் குடிநீர் கட்டணம், வீட்டு வரி,சொத்து வரியை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வை ரத்து செய்யக்கோரி நேற்று திருப்பூர் மாவட்ட கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் காங்கேயம் நகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் காங்கேயம் நகராட்சி பொறியாளர் சரவணனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் இருப்பதாவது:-

காங்கேயம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் மாதம் ரூ.50லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இந்த கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கோவை,ஈரோடு,திருப்பூர் போன்ற மாநகராட்சிகளில் தினசரி, வாரம் இரண்டு முறை, மூன்று முறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அங்கெல்லாம் ரூ.30, ரூ.40 என மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் மாதம் இரண்டு முறை கூட குடிநீர் வழங்காத காங்கேயம் நகராட்சி மட்டும் ரூ.150 என கட்டணம் உயர்த்தி உள்ளது கண்டனத்துக்குரியது.

அது போல் வீட்டு வரி ஒரு சதுர அடிக்கு 6 மாதத்திற்கு ரூ.1.10 பைசா, ஆண்டுக்கு ரூ.2.20 பைசா என உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் துப்புரவு பணிக்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு சாதாரண ஏழை, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com