காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் 6-ந் தேதி ஏலம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் 6-ந் தேதி ஏலம்
Published on

காஞ்சீபுரம் மாவட்ட காவல் நிலையங்களில் மதுக்கடத்தல் வழக்குகளில் பிடிபட்ட 48 இருசக்கர வாகனங்கள், 5 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 19 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 72 வாகனங்கள் உள்ளன.

இதையடுத்து, மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி உத்தரவின்படி, வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 6-ந் தேதி தேதி (வியாழன்கிழமை) காலை 10 மணியளவில் காஞ்சீபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு, அலுவலகத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

வாகனங்களை ஏலம் கேட்பவர்கள் முன் வைப்பு கட்டணத் தொகையாக ரூ.1,000-த்தை மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை)-க்குள் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் இரு சக்கர வாகனத்துக்கு அரசு விற்பனை வரியாக 12 சதவீதமும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்துக்கு 18 சதவீத வரியையும் உடனடியாக செலுத்தி விட வேண்டும்.

வாகனத்தின் விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் காஞ்சீபுரம் மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகத்தின் தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.

ஏலத்தில் கலந்து கொண்டு வாகனத்தை எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com