

முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள கீரனூர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலகன்னிச்சேரி கிராமத்தை சேர்ந்த முனியசாமி(வயது 31) என்பதும், இவர் மீது ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தரியவந்தது. இதையடுத்து முனியசாமியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து தடைசெய்யப்பட்ட 1 கிலோ போதை மாத்திரை தூள் மற்றும் 2 அரிவாள்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.