பணம், பொருட்கள் பறிமுதல்

உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பணம், பொருட்கள் பறிமுதல்
Published on

ராமநாதபுரம்,

சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றதாக ரூ.1 கோடியே 67 லட்சத்து 36 ஆயிரத்து 270 பறிமுதல் செய்யப்பட்டு 100 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு உள்ளது. இதுதவிர, உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.16 லட்சத்து 74 ஆயிரத்து 549 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 156 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 82 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களின் ரூ.87 லட்சத்து 72 ஆயிரத்து 990 திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 10 வழக்குகளில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 730 மதிப்பிலான பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 92 வழக்குகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களிடம் ரூ.89 லட்சத்து 83 ஆயிரதது 720 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் திருப்பி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதி களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.52 லட்சத்து 54 ஆயிரத்து 730 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, 13 சேர்கள், 3 கட்டில்கள், தலா 3 கிரைண்டர், மிக்சிகள், 6 மின்விசிறிகள், 2 பிளாஸ்க்குகள், 2 வாட்டர் ஹீட்டர், 4 அயன்பாக்ஸ், தலா 3 கேஸ் அடுப்பு, ஹாட்பாக்ஸ், 3 கடாய் சட்டி, ஒரு பனியார சட்டி, தலா 6 தவா, குக்கர்கள், 2 இன்டெக்சன் அடுப்பு போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com