

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகள் கூட்டமைப்பிற்கான நிர்வாகிகள் தேர்வு ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு தலைமையில் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவராக பிராதாப், செயலாளராக பவானி வடிவேலு, பொருளாளராக உமாதேவி ரமேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.