அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை: பார் உரிமையாளர் உள்பட 3 பேருக்கு அபராதம் - நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

அதிக விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்த பார் உரிமையாளர் உள்பட 3 பேருக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை: பார் உரிமையாளர் உள்பட 3 பேருக்கு அபராதம் - நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
Published on

நெல்லை,

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறையை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், சந்திப்பில் உள்ள ஒரு மது பான கடைக்கு பீர் குடிக்க கடந்த 8-10-2017 அன்று சென்றார். பீர்பாட்டில் விலை ரூ.120 என அச்சிடப்பட்டு இருந்தது. இதையடுத்து வெங்கடேஷ் 2 பீர்பாட்டிலை வாங்கி அங்கே குடித்தார்.

அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் 2 மதுபாட்டிலுக்கு ரூ.481-ஐ வசூல் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மதுபான கடை மேலாளரிடம் இதுகுறித்து புகார் செய்தார். மேலும் கூடுதலாக வசூல் செய்த ரூ.241-ஐயும், தான் குடித்து பீர் காலிபாட்டிலையும், திரும்பி ஒப்படைக்குமாறு கேட்டார்.

ஆனால் மதுபான கடை மேலாளர், வெங்கடேசுக்கு கூடுதலாக வசூல் செய்த பணத்தையும், காலி பாட்டிலையும் திருப்பி கொடுக்கவில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வெங்கடேஷ், வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்கள் சிவமூர்த்தி, முத்துலட்சுமி ஆகியோர் தீர்ப்பு கூறினர்.

அதில், முறையற்ற வணிகத்தில் ஈடுபட்ட பார் உரிமையாளர் மற்றும் மேலாளர் கூடுதல் தொகை ரூ.241-ஜ திருப்பி கொடுக்க வேண்டும். மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் கொடுக்க வேண்டும். மொத்தம் ரூ.15 ஆயிரம் 241-ஐ பார் உரிமையாளர், மேலாளர், உதவி ஆணையாளர் கலால் பிரிவு ஆகியோர் சேர்ந்து வெங்கடேசுக்கு கொடுக்க வேண்டும். இந்த அபராத தொகையை ஒரு மாதத்துக்குள் கட்ட தவறினால் 6 சதவீத வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com