

தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் கோர்ட்டில் சார்பு நீதிபதி சுல்தான் ஆர்பின் தலைமையில் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. மேலும் மாஜிஸ்திரேட்டுகள் சகானா மற்றும் அனுபிரியா ஆகியோரும் தனித்தனியாக வழக்கு விசாரணையை மேற்கொண்டனர். இதில் மொத்தம் 610 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துவரப்பட்டன. அதில் 369 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.23 லட்சத்து 16 ஆயிரத்துக்கு தீர்வு காணப்பட்டதாக தாம்பரம் சார்பு நீதிபதி சுல்தான் ஆர்பின் தெரிவித்தார்.