

திருச்சி,
திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி உத்தரவிட வேண்டும் என்று புத்தூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் சார்லஸ், திருச்சி மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மாசு கட்டுப்பாட்டுஅதிகாரி ஆகியோர் நாளை(திங்கட்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை நாளை காலை கோர்ட்டில் தெரிவிக்கலாம் என தண்டோரா மூலம் அறிவிக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து கோர்ட்டு ஊழியர்கள் நேற்று வண்ணாரப்பேட்டை பகுதியில் தண்டோரா மூலம் அறிவித்தபடி சென்றனர்.