செங்குன்றத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை புகாரின்பேரில் 5 பேர் போக்சோவில் கைது

செங்குன்றத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை புகாரின்பேரில் 5 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செங்குன்றத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை புகாரின்பேரில் 5 பேர் போக்சோவில் கைது
Published on

சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் தனது அண்ணனுடன் 13 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை அவரது அண்ணனின் நண்பர்கள் 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக நேற்று முன்தினம் ஆவடி போலீஸ் கமிஷனருக்கு புகார் வந்தது. புகாரின்பேரில், அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் மற்றும் திருவள்ளூர் மாவட்ட குழந்தை நலத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தனர். அதைத்தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேரையும் கைது செய்ய மகளிர் இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமிக்கும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கும் ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து செங்குன்றம் மற்றும் பெரம்பூர் பகுதிகளில் பதுங்கி இருந்த லட்சுமணன் (வயது 23), அப்துல் (22), அக்பர் (22), பாபு (27), கவுதம் (21) ஆகிய 5 பேர் மீதும் அம்பத்தூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com