‘வீடியோ கால்’ மூலம் பெண்ணிடம் ஆபாச பேச்சு: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

செல்போனில் ‘வீடியோ கால்’ மூலம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
‘வீடியோ கால்’ மூலம் பெண்ணிடம் ஆபாச பேச்சு: போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் கருங்கல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பென்சாம். இவர் வீடியோ கால் மூலமாக ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசியதுடன், சீருடையில் ஆபாசமாக நடந்து கொள்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இது போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் மற்றும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பென்சாம் நேற்று காலையில் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. கபில் குமார் சரத்கார் பிறப்பித்தார்.

இந்த உத்தரவு இன்ஸ்பெக்டர் பென்சாமுக்கு அனுப்பப்பட்டது. மேலும் அவர் விடுமுறையில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராகும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்டது யார்? வீடியோவில் தோன்றும் பெண் யார்? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com