இயற்கை உரத்துக்காக வயலில் மேய்ச்சலுக்கு விடப்படும் செம்மறி ஆடுகள்

கீழ்வேளூர் வட்டாரத்தில் இயற்கை உரத்துக்காக வயலில் மேய்ச்சலுக்கு செம்மெறி ஆடுகள் விடப்படுகிறது.
இயற்கை உரத்துக்காக வயலில் மேய்ச்சலுக்கு விடப்படும் செம்மறி ஆடுகள்
Published on

கீழ்வேளூர்,

நாகை மாவட்டத்தில் கடந்த 2016-2017-ம் ஆண்டு வறட்சியின் காரணமாக குறுவை, சம்பா, தாளடி ஆகிய சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட சிறிதளவு தண்ணீரை நம்பி விவசாயிகள் செய்த சம்பா பயிர்கள் முளைத்து வந்த நிலையில் கருகி போனது. இதன் காரணமாக விவசாயிகள் பாதிப்படைந்தது. மட்டுமின்றி கால்நடைகளும் தீவனம் இல்லாமல் உயிரிழந்தன.

இந்த நிலையில் கடந்த 2017-2018-ம் ஆண்டு குறுவை பொய்த்துபோன நிலையில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். சாகுபடி செய்தபோது பெய்த கனமழை காரணமாக ஓரளவு பயிர்கள் வளர்ந்து அறுவடை வரையில் தாக்குப்பிடித்தது. இருப்பினும் மகசூல் குறைவாகவே இருந்தது. தற்போது நாகை மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் முடிவடைந்து, வயல்களில் உள்ள வைக்கோல்களை கால்நடைகளுக்காக பெரும்பாலானோர் வாங்கி செல்கின்றனர்.

செம்மெறி ஆடுகள்

அதைதொடர்ந்து அறுவடை செய்த வயல்கள் அடுத்து தண்ணீர் வரும்வரையிலும் தரிசாகவே கிடக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் தற்போது தரிசாக கிடக்கும் வயல்களில் இயற்கை உரத்துக்காக செம்மறி ஆடுகள் மேய்ச்சலுக்கு விடப்படுகிறது.

கீழ்வேளூர் வட்டாரத்தில் பட்டமங்கலம், தேவூர், கீழ்வேளூர், பெருங்கடம்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான செம்மெறி ஆடுகள் லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு வயல்களில் மேய்ச்சலுக்கு விடப்படுகிறது. இந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு வரும் தொழிலாளர்கள் அந்த பகுதிலேயே சிறு குடில்கள் அமைத்து தங்குகின்றனர். இவர்கள் அடுத்து சாகுபடி காலம் தொடங்கும்வரை இந்த பகுதிகளிலேயே தங்கி ஆடுகளை மேய்க்கின்றனர். பின்னர் சாகுபடி தொடங்கிவிட்டால் ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்று விடுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com