புல்லட் ரெயில் திட்டத்துக்கு பி.கே.சி. நிலம்: அரசுக்கு ரூ.48 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அதிர்ச்சி தகவல்

புல்லட் ரெயில் திட்டத்துக்கு பி.கே.சி. நிலம் ஒதுக்கினால் அரசுக்கு ரூ.48 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
புல்லட் ரெயில் திட்டத்துக்கு பி.கே.சி. நிலம்: அரசுக்கு ரூ.48 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் அதிர்ச்சி தகவல்
Published on

மும்பை,

மும்பை-ஆமதாபாத் நகரங்கள் இடையே புல்லட் ரெயில் திட்டத்துக்கு பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் அபேயும் கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டினர். இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத்திட்டம் ஆகும். ஆனால், இந்த திட்டத்தை பற்றி முறையாக ஆராயாமல் மராட்டிய அரசு சம்மதம் தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் புல்லட் ரெயில் திட்டம் குறித்து பல்வேறு தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு இருந்தார். அவருக்கு பல அதிர்ச்சி தகவல்களை மாநில போக்குவரத்து துறை அளித்துள்ளது. அதன்படி புல்லட் ரெயில் திட்டம் மாநில அரசுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாநில நிதித்துறையின் தகவலின்படி, புல்லட் ரெயில் திட்டத்திற்கு ஆகும் செலவுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவே அதில் இருந்து வருவாய் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் அரசுக்கு அதிக நஷ்டம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள பாந்திரா-குர்லா காம்ப்ளக்ஸ் (பி.கே.சி.) நிலத்தை புல்லட் ரெயில் திட்டத்துக்காக அரசின் பல்வேறு துறைகளின் எதிர்ப்புக்கு மத்தியில் மந்திரி சபை ஒதுக்கீடு செய்ததாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு நிலம் வழங்கினால் அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் ரூ.48 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று நகர வளர்ச்சித்துறை அப்போது அரசை எச்சரித்து இருந்ததாகவும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com