திருவள்ளூர் மாவட்டத்திலேயே முதன் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த, ஆயுர்வேத சிகிச்சை மையம்; அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

திருவள்ளூர் மாவட்டத்திலேயே முதன்முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த, ஆயுர்வேத சிகிச்சை மையத்தை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்திலேயே முதன் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த, ஆயுர்வேத சிகிச்சை மையம்; அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்
Published on

சித்த, ஆயுர்வேத மையம்

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் 50 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ மையத்தையும், 50 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவ மையத்தையும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து தனியார் மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 60 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தையும் திறந்துவைத்தனர். இதையடுத்து பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிப்பதற்காக முதற்கட்டமாக 12 கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்களையும், ஆட்டோக்கள் மூலம் கபசுர குடிநீர் வழங்கும் பணி, 56 களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் பணி ஆகியவற்றையும் தொடங்கி வைத்தார்.

வேகமாக குறைந்து வருகிறது

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்திலேயே முதல் முறையாக கொரோனா சிகிச்சைக்காக பூந்தமல்லி நசரத்பேட்டையில் 100 படுக்கைகளுடன் சித்த மற்றும் ஆயுர்வேத மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.நமது பாரம்பரியமான சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மூலம் கொரோனாவை 100 சதவீதம் குணப்படுத்த முடியும். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் தொற்று எதுவும் இல்லை. இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது என தெரிவித்தார்.

அப்போது, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா, பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, பூந்தமல்லி நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், பூந்தமல்லி நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார், துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன், பூந்தமல்லி நகர செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com