சித்த மருத்துவர் திருதணிகாசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு

கொரோனா மருந்து கண்டுபிடித்ததாக பொய் கூறியதால் கைது செய்யப்பட்ட சித்த மருத்துவர் திருதணிகாசலத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சித்த மருத்துவர் திருதணிகாசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் திருதணிகாசலம் (வயது 49). இவர், தன்னை சித்த மருத்துவர் எனக்கூறிக்கொண்டு கொரோனா நோய் தொற்று தடுப்புக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தான் பேசிய வீடியோவை வெளியிட்டார். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய்யான தகவலை பரப்பியதாக அவர் மீது இந்திய ஓமியோபதி மற்றும் மருத்துவத்துறை இயக்குனர், சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் திருதணிகாசலத்தை கைது செய்தனர்.

இந்தநிலையில் திருதணிகாசலம் ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ரோஸ்லின் துரை முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், திருதணிகாசலம் மீதான விசாரணை முடிவடையவில்லை. அவர் மீது மேலும் பலர் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதாடினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, திருதணிகாசலம் மீதான ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் பணம் வாங்கிக்கொண்டு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி 2 பேர் அளித்த புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருதணிகாசலத்தை கைது செய்தனர். அதிலும் அவருக்கு நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com