மீனம்பாக்கத்தில் சித்தா சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் செயல்படதொடங்கியது

கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 70 படுக்கை வசதிகளுடன் சித்தா சிறப்பு கொரோனா சிகிச்சை மையமும், 70 படுக்கை வசதிகளுடன் கூடிய அலோபதி சிறப்பு கொரோனா சிகிச்சை மையமும் அமைக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மீனம்பாக்கத்தில் சித்தா சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் செயல்படதொடங்கியது
Published on

இந்த சித்தா சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கொரோனா ஆரம்ப அறிகுறியுடன் உள்ளவர்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களை சித்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து சுழற்சி முறையில் மூலிகை உணவுகள், மரமஞ்சள் குடிநீர், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்கி குணப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

கொரோனா தொற்று ஆரம்ப அறிகுறி இருக்கும்போதே நிலவேம்பு, கபசுர பொடி ஆகியவற்றை கலந்து குடித்து வந்தால் பாதிப்பில் இருந்து விடுபடலாம் என சித்த மைய கண்கணிப்பு மருத்துவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com