மணலி மண்டல அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தை முன்மாதிரி மண்டலமாக உருவாக்க அங்கு முழுக்க, முழுக்க பெண்களை வைத்து துப்புரவு பணிசெய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மணலி மண்டல அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
Published on

இதனால் அங்கு பணிபுரிந்து வந்த ஆண் துப்புரவு பணியாளர்களை வேறு மண்டலங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளனர். இதற்கு ஏற்கனவே அங்கு பணியில் உள்ள ஆண் துப்புரவு பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் தங்களை மணலி மண்டலத்திலேயே பணியமர்த்த வேண்டும் அல்லது வேறு மண்டலத்துக்கு மாற்றப்படும்போது போக்குவரத்து சூழலை கருத்தில் கொண்டு கூடுதலாக ஊதிய உயர்வு தரவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை மணலி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துப்பரவு தொழிலாளர்களுக்கு ஆதரவாக சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ., முன்னாள் கவுன்சிலர் ஏ.வி. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். அங்கு வந்த உதவி கமிஷனர், இதுபற்றி ஒப்பந்ததாரரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com