தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் ரூ.60 கோடியில் “ஸ்மார்ட் கிளாஸ்” தொடங்கப்படும்

தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் ரூ.60 கோடி மதிப்பில் “ஸ்மார்ட் கிளாஸ்” தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் ரூ.60 கோடியில் “ஸ்மார்ட் கிளாஸ்” தொடங்கப்படும்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கான பயோ மெட்ரிக் வருகை பதிவேடு திட்டம் பரீசார்த்த முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 892 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நியமனம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில், ஆசிரியர் சங்கம் ஒன்று வழக்கு தொடர்ந்து தடையாணை பெற்றுள்ளது. இந்த வழக்கு நிறைவடைந்தவுடன், காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்காக புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான புத்தகம் ஜூன் மாதம் வழங்கப்படும். 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் ரூ.60 கோடி மதிப்பில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும். மேலும் ரூ.432 கோடியே 37 லட்சம் மதிப்பில் கணினிமயமாக்கிய வகுப்பறை திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கற்றுத்தருவதும், கற்பித்தலும் என்ற வழிகாட்டு நெறிமுறை புத்தகத்தை தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் பள்ளிகளுக்கு வழங்கியுள்ளோம். இதை படித்து ஆசிரியர்கள், மாணவர்களுடன் நேசக்கரம் நீட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com