சமூக வலைத்தளங்களில் அழகிகளின் செல்போன் எண்களை பகிர்ந்து விபசாரத்துக்கு அழைக்கும் கும்பல் - போலீசார் வலைவீச்சு

சமூக வலைத்தளங்களில் அழகிகளின் செல்போன் எண்களை பகிர்ந்து, ஆன்லைன் மூலம் முன்பணம் பெற்று விபசாரத்துக்கு அழைக்கும் கும்பலை தனிப்படை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் அழகிகளின் செல்போன் எண்களை பகிர்ந்து விபசாரத்துக்கு அழைக்கும் கும்பல் - போலீசார் வலைவீச்சு
Published on

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் ஏராளமான மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல மசாஜ் சென்டர்களில் சட்டவிரோதமாக விபசாரம் நடப்பதாக மாநகர போலீஸ் கமிஷனர் சுரேசுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் அவர் விபசார தொழிலை அடியோடு ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதன்பேரில் அனைத்து மசாஜ் சென்டர்களிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பல மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த அழகிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் அரசு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் அந்த மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அதன் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டனர். இதனால் மசாஜ் சென்டர் என்ற பெயரில் நடந்து வந்த விபசார தொழில் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் விபசார கும்பலைச் சேர்ந்தவர்கள் நூதன முறையில் தங்களது தொழிலை விரிவுபடுத்தி வருகிறார்கள். அதாவது சமூக வலைத்தளங்கள் மூலமும், டேட்டிங் செயலிகள் மூலமும் அழகிகளின் புகைப்படங்கள், செல்போன் எண்கள் ஆகியவற்றை பகிர்ந்து விபசார தொழிலை நடத்தி வருகிறார்கள். இளம் தலைமுறையினர், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வரும் ஊழியர்களைத்தான் இவர்கள் பெரும்பாலும் குறிவைத்து விபசாரத்துக்கு அழைக்கிறார்கள்.

மேலும் குறிப்பிட்ட அழகி, அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்றாலோ, அவர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றி நேரத்தை உல்லாசமாக செலவிட வேண்டும் என்றாலோ அதற்காக ஆன்லைன் பணப் பரிமாற்றம் மூலம் முன்பணம் பெற்றுக் கொள்கிறார்கள்.

இதுகுறித்து அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் சுரேஷ், உடனடியாக விபசார தொழிலை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் அதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் இந்த நவீன விபசார கும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com