காற்றில் பறந்த சமூக இடைவெளி: இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம்

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
காற்றில் பறந்த சமூக இடைவெளி: இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம்
Published on

புதுச்சேரி,

புதுவையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் மளிகை, காய்கறி, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள், மார்க்கெட்டுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டு மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டு வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பொதுமக்கள் இறைச்சி, மீன் வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளளனர். இதனால் நேற்று இறைச்சி , மீன் விற்பனை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புதுச்சேரி அம்பேத்கர் சாலை, வழுதாவூர் சாலை, காராமணிகுப்பம், மேட்டுப்பாளையம், ஆம்பூர் சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் இறைச்சி, மீன் வியாபாரம் கடும்ஜோராக நடந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் வழக்கத்தைவிட அதிக விலைக்கு விற்கப்பட்டது.

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com