சமூக வலைதளங்களில் சாதி குறித்து அவதூறு வீடியோக்கள் பரப்பிய 9 பேர் கைது போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

சமூக வலைதளங்களில் சாதி குறித்து அவதூறு வீடியோக்கள் பரப்பிய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறினார்.
சமூக வலைதளங்களில் சாதி குறித்து அவதூறு வீடியோக்கள் பரப்பிய 9 பேர் கைது போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
Published on

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முகநூல், வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் ஒரு சிலர் மற்ற மதம் மற்றும் சாதியினரை பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை பரப்பி வருகின்றனர். பொறையாறு அருகே உள்ள எருத்துக்கட்டி சாத்தனூரில் பிற சாதியினரை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்டதாக பொறையாறு மரகதம் காலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரேம்குமார் (வயது 27), மாங்குடி ஆர்.சி. தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரேம்குமார் (28), பூதனூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளிதாஸ் மகன் கவுதமன் (23), அதே பகுதிகளை சேர்ந்த குழந்தைசாமி மகன்கள் ஜான்சன் (28), ஜான்போஸ் (21), அய்யாபிள்ளை மகன் ஆனந்தபாபு (20), குமார் மகன் வீரபாண்டியன் (20), பள்ளி தெருவை சேர்ந்த மதியழகன் மகன் மதிவாணன் (23), மாங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் பெலிக்ஸ்பாரதி (22) ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

மேலும் தப்பி ஓடிய 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். பிற சாதியினர் குறித்து அவதூறு வீடியோக்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையை தூண்டும் வகையில் வீடியோக்களை பரப்பும் நபர்கள் மீது, நாகை மாவட்ட போலீசாரிடம் புகார் தெரிவிப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com