

புதுச்சேரி,
வளைய சூரிய கிரகணம் இன்று (வியாழக்கிழமை) ஏற்படுகிறது. இந்த கிரகணம் காலை 8.08 மணி முதல் 11.19 மணிவரை தொடரும். இதை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது. எனவே சூரிய கிரகணத்தை காண புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் 40 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மணக்குள விநாயகர்
சூரிய கிரகணத்தையொட்டி புதுவை கோவில்களில் இன்று பகல் முழுவதும் நடை சாத்தப்படுகிறது. மணக்குள விநாயகர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்ப்பட்டு பூஜைகள் நடத்தி 6 மணிக்கு நடை சாத்தப்படும். அதன்பின் மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும்.
பெருமாள் கோவில்
இதேபோல் காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜை செய்து நடை சாத்தப்படும். பின்னர் மாலையில் நடை திறக்கப்பட உள்ளது.
இதேபோல் புதுவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று பகல் முழுவதும் நடை சாத்தப்படுகிறது.