மொத்த விலையில் மட்டுமே இனி விற்பனை வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வரவேண்டாம்

மொத்த விலையில் மட்டுமே இனி விற்பனை வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வரவேண்டாம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வியாபாரிகள் அறிவிப்பு.
மொத்த விலையில் மட்டுமே இனி விற்பனை வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வரவேண்டாம்
Published on

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மீன் மார்க்கெட்டுகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கையாளுமாறு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தநிலையில் சென்னையின் முக்கிய மீன் சந்தையான வானகரம் மீன் மார்க்கெட்டில் இனி சில்லறை விலையில் மீன்கள் விற்பனை செய்யப்படாது என்றும், பொதுமக்கள் வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து வானகரம் மீன் மார்க்கெட் நிர்வாகி துரை கூறியதாவது:-

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் வானகரம் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இனி மொத்த விலையில் மட்டுமே மீன்கள் விற்பனை செய்யவும், சில்லறை விற்பனை போக்கை நிறுத்தவும் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே நிலைமை சீரடையும் வரையில் இனி பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு மீன்கள் வாங்க நேரில் வரவேண்டாம். வியாபாரிகள் மட்டும் முழுமையான பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து மீன்கள் வாங்கி செல்லலாம். மக்கள் நலனே எங்களுக்கு முக்கியம் என்பதால் நிலைமையை கருத்தில்கொண்டு இந்த முடிவை வானகரம் மீன் மார்க்கெட் நிர்வாகம் எடுத்துள்ளது. பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com