சூரப்பாவை பணி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 150 பேர் மீது வழக்கு

சூரப்பாவை பணி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 150 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூரப்பாவை பணி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 150 பேர் மீது வழக்கு
Published on

விழுப்புரம்,

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகம் இயங்கவும், அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிற நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணிசார்பில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டிலேயே இறுதிவரை தொடர வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி முன்பு விழுப்புரம் மத்திய மாவட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் தினகரன், தாகப்பிள்ளை, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் ஸ்ரீவினோத், அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் முருகன், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் லட்சுமணன், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அன்பு, தயா.இளந்திரையன், ராஜவேல், மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் அன்பழகன், ராஜ்குமார், முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேது நாதன், செந்தமிழ்ச்செல்வன், வக்கீல்கள் ஆதித்தன், அசோகன், பொருளாளர் கண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆனந்த், மாவட்ட மாணவரணி செயலாளர் தயாளன், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் டி.கே.பி. ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், அண்ணாதுரை, மணிமாறன், சீனிராஜ், சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com