தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பிரசாரம்

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று காலை அடையாறு, பெசன்ட்நகர், திருவான்மியூர் பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தார்.
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் பிரசாரம்
Published on

அடையாறு,

அடையாறு தொலை தொடர்பு அலுவலகம் அருகே தொடங்கிய பிரசாரம் சாஸ்திரி நகர், பெசன்ட் நகர் வழியாக சென்று இந்திரா நகர் முத்து மாரியம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது. மாலையில் திருவான்மியூர் குப்பம், மார்க்கெட் வழியாக சென்று கணேஷ் நகரில் முடிவடைந்தது.

அப்போது தமிழச்சி தங்கபாண்டியன் கூறும்போது, 5 ஆண்டுகளாக இந்த தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெயவர்த்தன் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மேம்படுத்தி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்? என உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பி, 30 ஏக்கர் நிலப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஜெயவர்த்தன் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டார் என்றார்.

அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் உள்பட கட்சி பிரமுகர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com