

நாகர்கோவில்,
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கொட்டாரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் தலைவருமான அழகேசன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தம்பித்தங்கம் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் முத்துசாமி வரவேற்று பேசினார்.
குமரி மாவட்ட அ.தி.மு.க. வர்த்தக அணி செயலாளர் ஜெஸீம், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பேராசிரியர் நீலபெருமாள், பேரூர் செயலாளர்கள் வின்ஸ்டன், ஆடிட்டர் சந்திரசேகரன், ராஜபாண்டியன், சீனிவாசன், தாமரைதினேஷ், வீரபத்திரபிள்ளை, குமார், மனோகரன், ஒன்றிய துணைசெயலாளர் பாக்கியபாய், ஊராட்சி செயலாளர்கள் லீன், செல்லம்பிள்ளை, பார்த்தசாரதி, செல்லபெருமாள், லட்சுமணன், குலசேகரபுரம் பஞ்சாயத்து தலைவர் சுடலையாண்டி, மகாராஜபுரம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து, அகஸ்தீஸ்வரம் அ.தி.மு.க.நிர்வாகி சிவபாலன், அறங்காவலர் குழு உறுப்பினர் சதாசிவம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குருபாதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வரவேற்பு
இந்த கூட்டத்தில், குமரி மாவட்டத்தில் 23-ந்தேதி நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டம் வருகை தரும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமையில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ. தி.மு. க. சார்பில் 1000 தொண்டர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி அ.தி.மு.க. கொடியுடன் அணிவகுத்து தோவாளையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.