ஆத்தூரில் சிறப்பு மனுநீதி முகாம்: 388 பேருக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவி கலெக்டர் ரோகிணி வழங்கினார்

ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கான சிறப்பு மனுநீதி முகாம் ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
ஆத்தூரில் சிறப்பு மனுநீதி முகாம்: 388 பேருக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவி கலெக்டர் ரோகிணி வழங்கினார்
Published on

ஆத்தூர்,

முகாமில் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்துகொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் மனுக்களை வழங்கினர்.

முகாமில் 388 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் ரோகிணி ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் உணவுகளின் தரம் மற்றும் சுகாதார முறையில் செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com