ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை

ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிக்கு 171 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை
Published on

ஸ்டேட் வங்கி முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். நாடு முழுவதும் ஏராளமான கிளைகளுடன் விரிவான வங்கிச் சேவை வழங்கும் இந்த நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெறுவதை இளைஞர்கள் பலரும் விரும்புகிறார்கள். 2018-ம் ஆண்டில் பல ஆயிரம் பணியிடங்களை ஸ்டேட் வங்கி நிரப்ப இருக்கிறது. முதல்கட்டமாக சிறப்பு அதிகாரி தரத்திலான 121 பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற உயர் பதவி பணியிடங்கள் இதில் உள்ளன. கிரெடிட் அனலிஸ்ட், அசெட் மேனேஜ்மென்ட், பிசினஸ் டெவலப்மென்ட் மார்க்கெட்டிங், ஹை வேல்யு அக்ரி பிசினஸ் டெவலப்மென்ட், ரிலேசன்ஷிப் மேனேஜ்மென்ட், புராடெக்ட் டெவலப்மென்ட், டேட்டா இன்டர்பிரிடேசன், டெக்னாலஜி, வெல்த் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:

மேலாளர் தரத்திலான பணிக்கு 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுநிலை மேலாளர் பணிக்கு 25 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 30-6-2017-ந் தேதியை அடிப் படையாகக் கொண்டு கணக்கிடப்படும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

சி.ஏ., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., ஐ.சி.டபுள்யு.ஏ., ஏ.சி.எஸ்., ரூரல் மார்க்கெட்டிங், ரூரல் மேனேஜ்மென்ட், பி.ஜி. அக்ரிகல்சர் போன்ற முதுநிலை படிப்புகள், முதுநிலை டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் காணலாம்.

தேர்வு செய்யும் முறை:

நேரடி நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.600 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர், பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும். 4-2-2018-ந் தேதி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாளாகும். நகல் விண்ணப்பம் மும்பை முகவரிக்கு சென்றடைய கடைசி நாள் 12-2-2018-ந் தேதியாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com