ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

தர்மபுரி,

ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி தர்மபுரி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார சேவையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினார்கள்.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த வளாகத்தில் உள்ள ராஜதுர்க்காம்பிகை அம்மனுக்கு மகாஅபிஷேகமும், யாகபூஜையும் நடைபெற்றது. பின்னர் கல்யாண காமாட்சியம்மன் அட்சயாதேவி- அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

தர்மபுரி எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள நாககன்னியம்மன் கோவிலில் ஆடி மாத 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அங்குள்ள பாம்பு புற்றுக்கு பால் ஊற்றியும், முட்டைகளை வைத்தும் வழிபட்டனர். இதேபோல் தர்மபுரி கடைவீதி பிரசன்னவெங்கட்ரமண சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பிரசன்ன வெங்கட்ரமணசாமி கிரகலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தர்மபுரி பாரதிபுரம் ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், அன்னசாகரம் மாரியம்மன் கோவில், வெளிப்பேட்டை தெரு அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை ஸ்ரீமகா மாரியம்மன் கோவில், மதிகோன்பாளையம் ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோவில், கடைவீதி மருதவாணேஸ்வரர் உடனாகிய அம்பிகாபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்பட நகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் நேற்று காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com