நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கிருமிநாசினி தெளிப்பு
Published on

நெல்லை,

கொரோனா தொற்று பரவுவதை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதையொட்டி அனைத்து அரசு அலுவலகங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் இயங்கியது. அதன்பிறகு 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் தற்போது அனைத்து துறைகளும் இயங்கி வருகின்றன.

ஊரடங்கு உத்தரவால் திங்கட்கிழமை நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை என்றாலும் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுடைய கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புகார் பெட்டியில் போட்டுச் செல்கின்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அங்கு பலர் முககவசம் இல்லாமல் வருகிறார்கள். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் நிற்கும் போலீசார் தடுத்து நிறுத்தி, முககவசம் அணிந்தவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்கிறார்கள்.

கிருமிநாசினி தெளிப்பு

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை. இதனால் ஊழியர்கள் பலர் கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கலெக்டர் அலுவலகம், கார் நிறுத்தும் இடம், உதவி கலெக்டர் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலக வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com