எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 64 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி

நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 64 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றன.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 64 அரசு பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 492 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 64 அரசு பள்ளிக்கூடங்கள், 72 அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், 139 மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 275 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிக்கூடங்கள் விவரம் வருமாறு:-

உண்டி உறைவிடப்பள்ளி -மேலணை பாபநாசம், அரசு உயர்நிலைப்பள்ளி-காவூர், அரசு உயர்நிலைப்பள்ளி -மாஞ்சோலை, அரசு உயர்நிலைப்பள்ளி-மன்னார்கோவில், அரசு உயர்நிலைப்பள்ளி -மயிலப்புரம், அரசு உயர்நிலைப்பள்ளி-நாலாங்கட்டளை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி- பத்தமடை, அரசு உயர்நிலைப்பள்ளி-மணிமுத்தாறு, அரசு உயர்நிலைப்பள்ளி-அயோத்தியாபுரிபட்டினம், அரசு மேல்நிலைப்பள்ளி-அயன்குறும்பலாபேரி, அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி-வலசை, அரசு உயர்நிலைப்பள்ளி-இடைகால், அரசு உயர்நிலைப்பள்ளி-குலயநேரி, அரசு உயர்நிலைப்பள்ளி-பொய்கை, அரசு உயர்நிலைப்பள்ளி-வேலாயுதபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி-வினைதீர்த்தநாட்டர்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி-காசிதர்மம், அரசு மேல்நிலைப்பள்ளி-மேலகரம், அரசு மேல்நிலைப்பள்ளி- பூலாங்குளம், அரசு மேல்நிலைப்பள்ளி-சுந்தரபாண்டியபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி-வடகரை, பாரதியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி-நெல்லை டவுன், அரசு உயர்நிலைப்பள்ளி-கம்மாலங்குளம், அரசு உயர்நிலைப்பள்ளி-குத்துக்கல், அரசு உயர்நிலைப்பள்ளி-பாலாமடை.

அரசு உயர்நிலைப்பள்ளி-ரஸ்தா, அரசு உயர்நிலைப்பள்ளி-தருவை, அரசு மேல்நிலைப்பள்ளி- நெல்லை, அரசு ஆதிதிராவிடர் மகளிர் மேல்நிலைப்பள்ளி- நல்லம்மாள்புரம், அரசு ஆதிதிராவிடர் மகளிர் மேல்நிலைப்பள்ளி- துலுக்கர்பட்டி, அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி-முன்னீர்பள்ளம், அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி-கங்கைகொண்டான், அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி-மானூர், அரசு உயர்நிலைப்பள்ளி-சத்திரம்குடியிருப்பு, அரசு உயர்நிலைப்பள்ளி-செட்டிக்குறிச்சி, அரசு உயர்நிலைப்பள்ளி-மேலப்பிள்ளையார்குளம், அரசு மேல்நிலைப்பள்ளி-பர்கிட்மாநகரம், அரசு மேல்நிலைப்பள்ளி-நடுக்கல்லூர், அரசு மேல்நிலைப்பள்ளி-சுத்தமல்லி, அரசு சேவை இல்லம்-பாளையங்கோட்டை, ஜவகர் அரசு உயர்நிலைப்பள்ளி-டவுன், மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி- மீனாட்சிபுரம், அரசு உயர்நிலைப்பள்ளி-தேவர்குளம், அரசு உயர்நிலைப்பள்ளி-மடத்துப்பட்டி.

அரசு உயர்நிலைப்பள்ளி-வென்றிலிங்கபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி -தென்மலை, அரசுமேல்நிலைப்பள்ளி- வன்னிக்கோனேந்தல், அரசு உயர்நிலைப்பள்ளி-பெருங்கோட்டூர், அரசு உயர்நிலைப்பள்ளி -வெள்ளப்பநேரி, அரசு உயர்நிலைப்பள்ளி-வெங்கடாசலப்புரம், அரசு உயர்நிலைப்பள்ளி-காவல்கிணறு, அரசு உயர்நிலைப்பள்ளி -மாடன்பிள்ளைதர்மம்.

அரசு உயர்நிலைப்பள்ளி-மதகநேரி, அரசு உயர்நிலைப்பள்ளி-வடக்கு விஜயநாராயணம், அரசு உயர்நிலைப்பள்ளி-தெற்கு கருங்குளம், அரசு உயர்நிலைப்பள்ளி-திருவேங்கடநாதபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி-துலுக்கர்பட்டி, அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி-கடம்பன்குளம், அரசு உயர்நிலைப்பள்ளி-ஆத்துக்குறிச்சி, அரசு உயர்நிலைப்பள்ளி-காரியாண்டி, அரசு உயர்நிலைப்பள்ளி-கோலியன்குளம், அரசு உயர்நிலைப்பள்ளி-பத்மநேரி, அரசு உயர்நிலைப்பள்ளி-ரோஸ்மியாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி-பழவூர்.

இந்த பள்ளிக்கூடத்தில் படித்த மாணவ-மாணவிகள் பிளஸ்-1 சேர்வதற்காக நேற்று விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com