9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 9 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது
Published on

தேனி:

மாநில நல்லாசிரியர்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டது.இதையடுத்து 9 பேர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் விவரங்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று அறிவித்தார்.

விருது பெறுபவர்கள்

அதன்படி தேனி மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் விவரம் வருமாறு:-

ஆண்டிப்பட்டி அருகே ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேஷ்குமார், சண்முகசுந்தரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன், சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சின்னராஜ், அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை சுகந்தி, கம்பம் ஸ்ரீமுக்தி விநாயகர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், கோம்பை ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா, பெரியகுளம் அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, சின்னமனூர் தி மேயர் ராம் மெட்ரிக் பள்ளி முதல்வர் சிவராமச்சந்திரன், உத்தமபாளையம் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் பிரபு ஆகியோருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com