கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகத்தை எதிர்த்து போராட்டம்

கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகத்தை எதிர்த்து போராட்டம் நடந்தது.
கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகத்தை எதிர்த்து போராட்டம்
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும் கீழமணக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான ஆயத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் துறைமுகம் அமையும் பட்சத்தில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

குறிப்பாக, கன்னியாகுமரி, கோவளம், இலந்தையடிவிளை, நரியன்விளை, கோவில்விளை, முகிலன்குடியிருப்பு, வாவத்துறை உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் வர்த்தக துறைமுகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என பலக்கட்ட போராட்டங்கள் நடந்தன.

இந்தநிலையில், வாவத்துறை பங்கு மக்கள் சார்பில் கன்னியாகுமரியில் நேற்று ஆர்ப்பாட்டம், கண்டன கூட்டம் நடந்தது. இதில் துறைமுக எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரபா பெர்னான்டோ தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம், மக்கள் இயக்க இணை ஒருங்கிணைப்பாளர் பார்த்த சாரதி, முருகேசன், தியாகராஜன் உள்பட பலர் பேசினர்.

போராட்டத்தில் கன்னியாகுமரி, கோவளம் போன்ற கிராமங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com