

சுல்தான்பேட்டை
தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்றார். இதனை சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள்வழங்கியும் கொண்டாடினர்.
இதனை தொடர்ந்து பச்சார்பாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் தி.மு.க.வினர் தங்கள் கட்சிகொடியேற்ற சென்றனர்.
அப்போது,அதேபகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர்சிலர் அங்கு தி.மு.க. கொடியேற்றக்கூடாது எனக் கூறி கொடியேற்ற சென்ற தி.மு.க.வினரிடம்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றிய தி. மு.க.பொறுப்பாளர் பி.வி.மகாலிங்கம், கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எம்.கே.முத்துமாணிக்கம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் தர்மராஜ், செஞ்சேரிப்புத்தூர் ஊராட்சி தலைவர் எஸ்.கே.டி பழனிச்சாமிஉள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் அங்கு கூடினர்.
தொடர்ந்து அ.தி.மு.க.வினர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடந்துசுல்தான்பேட்டைபோலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தகராறில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினரை பொது இடத்தில் கொடியேற்றுவதற்கு தகராறு செய்யக்கூடாது என கூறி கடுமையாக எச்சரிக்கை செய்து கலைந்து போகச் செய்தனர்.
இதன் பின்னர் அமைதியான முறையில் தி.மு.க.வினர் கொடியேற்று விழா மற்றும் வீடு,வீடாக சென்று இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தன.போலீசார் சில மணிநேரம் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
தி.மு.க வினரைகொடியேற்ற விடாமல் அ.தி.மு.க.வினர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.