போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை கிழக்கு மாட வீதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 57). இவர், ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் திடீர் சாவு
Published on

நேற்று மதியம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சார்லசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக சக போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவருக்கு சாந்தி (53) என்ற மனைவியும், அவினாஷ் (29) மற்றும் ஹரிஷ் (27) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com