

ஆம்பூர்
பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மாஜித் (வயது 24), குறும்படம் தயாரிப்பாளர். இவர் நேற்று குறும்படம் எடுப்பதற்காக ஒரு காரில் தனது நண்பர்கள் 2 பேருடன் பெங்களூருவில் இருந்து புதுச்சரிக்கு சென்று விட்டு, அங்கிருந்து பெங்களூருவை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது காரின் என்ஜினில் இருந்து கரும்புகை வந்தது. உடனே காரை நிறுத்தி பார்த்தனர்.
என்ஜினில் இருந்து அதிகமாக புகை வந்தது. அந்தத் தீ மளமளவென எரிந்தது. அப்துல்மாஜித் மற்றும் நண்பர்கள் தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
உடனே அவர்கள் ஆம்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேரும் உயிர் தப்பினர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.