பெருமாநல்லூர் அருகே காரில் திடீர் தீ; 4 பேர் உயிர் தப்பினர்

பெருமாநல்லூர் அருகே காரில் திடீரேன தீ பிடித்தது. அதில் பயணம் செய்த 4 பேர் உயிர் தப்பினர்.
பெருமாநல்லூர் அருகே காரில் திடீர் தீ; 4 பேர் உயிர் தப்பினர்
Published on

பெருமாநல்லூர்,

சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூரை அடுத்த நியூதிருப்பூர் மேம்பாலத்தில் நேற்று இரவு 8 மணியளவில் கோவையை நோக்கி ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. திடீரென்று அந்த காரில் இருந்து புகை வெளியே வந்தது. உடனே காரை ஓட்டி வந்த கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த பிரதீப் ராஜ்குமார் (வயது 40) அதை நிறுத்தினார். காரில் இருந்து அவரும், அவருடைய மனைவி சுபா (38) மற்றும் 2 குழந்தைகளும் பதறி அடித்து கொண்டு கீழே இறங்கி ஓடினர். சிறிது நேரத்தில் அந்த கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் இது குறித்து அவினாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. காரில் வந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com