பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயாரான கரும்புகள்

உடையார்பாளையம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ளன.
பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயாரான கரும்புகள்
Published on

உடையார்பாளையம்,

பொங்கல் பண்டிகை என்றால் அனைவரது நினைவுக்கும் வருவது கரும்புதான். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம், தா.பழூர், கொலையனூர், உல்லியக்குடி, ஆலம்பள்ளம், சுத்தமல்லி, சுந்தரேசபுரம், ஸ்ரீபுரந்தான் பொய்யூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது, இந்த கரும்புகள் விளைச்சல் பருவத்துக்கு வந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் இதனை வாங்க வியாபாரிகள் வர தொடங்கி உள்ளனர். இதனிடையே சில இடங்களில் வயலிலேயே செங்கரும்புகளை சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர்.

விலை உயர்வு

கொரோனாவால் வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் உரம்விலை உயர்வு காரணத்தால் கரும்புகளின் விலை உயர்ந்துள்ளது.

ஒரு கரும்பின் விலை ரூ.17 முதல் 25 வரையிலும், 10 கரும்பு கொண்ட கட்டு ரூ.250 முதல் 350 வரையிலும் விற்பனையாகுகிறது. சில விவசாயிகள் அறுவடை செய்து நேரடியாக சில்லரை விற்பனையில் ஈடுபட முடிவுசெய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com