

இநத நிலையில் நேற்று முன்தினம் இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்த நிலையில், சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழவில்லை. நேற்றும் இந்த அரிய நிகழ்வை காண 2-வது நாளாக பக்தர்கள் திரண்டு வந்தனர். ஆனால் நேற்றும் சூரிய ஒளி லிங்கத்தின் மீது விழவில்லை. அலைமோதிய பக்தர்களின் கூட்ட நெரிசலால் ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்த ஒளியானது நந்தியின் மீது பட்டு கருவறை முன்பு உள்ள உண்டியல் வரை வந்து மறைந்துவிட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.