

வேட்பு மனுதாக்கல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 கட்டங்களாக அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்ற தலைவர், 24 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போன்ற பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று காயரம்பேடு, தென் மேல்பாக்கம், அஞ்சூர் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல மண்ணிவாக்கம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல்...
இதன் காரணமாக காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்திற்குள் வேட்பாளர்களுடன் வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முககவசம் அணியாமலும் கூட்டமாக ஒன்று கூடி சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். . இதனால் கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.