முதுமையில் இனிமை

கோடை வெப்பம் வயதானவர்களை அதிக அளவில் பாதிக்கும். எளிய உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உடல் உஷ்ண பிரச்சினையில் இருந்து மீண்டுவிடலாம்.
முதுமையில் இனிமை
Published on

கோடை காலத்தில் முதுமை பருவத்தை இனிமையாக கழிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்!

வெளியிடங்களுக்கு செல்வதாக இருந்தால் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பயண திட்டங்களை வகுக்க வேண்டும். வெளியே செல்லாமல் உடற்பயிற்சி கூடங்களிலேயே அனைத்து விதமான பயிற்சிகளையும் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. வெயிலின் தாக்கத்தால் காலை, மாலை வேளையில் போதிய நடைப்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்கமுடியாமல் போனால் டிரெட்மில்லில் நடைப்பயிற்சியை தொடரலாம். மால்களுக்கு ஷாப்பிங் செல்வதாக இருந்தால் அங்கு நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம்.

நடைப்பயிற்சிக்கு இணையாக நீச்சல் பயிற்சிக்கும் போதிய நேரம் ஒதுக்க வேண்டும். அது உடலுக்கும், மனதுக்கும் இதமளிக்கும்.

திட உணவுகளை விட திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். எனினும் காபின் கலந்த பானங்கள், மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெற்று திரவ உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். சோடியம், பொட்டாசியம் நிறைந்த உணவுகள், பானங்கள், சூப் வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. அவை உடலில் உள்ள திரவ இழப்பை ஈடு செய்யும். அதிகம் தண்ணீர் பருகுவதும் அவசியம்.

நீரிழப்பு அறிகுறிகள், உடல் சோர்வு, தாகம், அழற்சி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

வெளியே செல்வதாக இருந்தால் அகலமான தொப்பியை அணிந்து செல்வது நல்லது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com