தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்,

தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 9 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த தாசில்தார்கள் 3 மாதம் பணிக்காக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஒரே நேரத்தில் 9 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு தற்காலிகமாக தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் நலன் கருதி இடமாற்றம் செய்யப்பட்ட 9 தாசில்தார்களையும் மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் பணியில் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் வட்டக்கிளை சார்பில் வட்ட பொறுப்பில் உள்ள தாசில்தார்களை வெளிமாவட்டத்திற்கு மாறுதல் செய்வதை கண்டித்து பாபநாசம் வட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமையில் பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட துணை தலைவர் வரதராஜன், வட்ட செயலாளர் மங்கையர்கரசி, வட்ட பொருளாளர் செல்வராணி, வட்ட துணை தலைவர் சுந்தரேசன், பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் பூங்கொடி, துணை தாசில்தார் செல்வம் உள்பட வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com