ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. இந்த ஆலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று மடத்தூர், மீளவிட்டான், பண்டாரம்பட்டி, தெற்கு சிலுக்கன்பட்டி, வடக்கு சிலுக்கன்பட்டி, சில்லாநத்தம், நடுவக்குறிச்சி, சங்கரபேரி, தெற்கு வீரபாண்டியபுரம், குமாரரெட்டியாபுரம், தூத்துக்குடி சகாயபுரம், மட்டக்கடை, லூர்தம்மாள்புரம், மாதவன்நாயர் காலனி, திரேஸ்புரம், மினி சகாயபுரம், மாதாகோவில் தெரு, லயன்ஸ்டவுன், குருசாமிபுரம், குரூஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் எங்கள் ஊரில் இருந்த பலர் வெளியூருக்குச் சென்று வேலை பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒருசில சிறிய நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்களுக்கு கூட குறைந்த அளவு வருமானமே கிடைக்கிறது. எனவே தொடர்ந்து மக்கள் நலப்பணிகளை செய்துவரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com