வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்ற வக்கீல் உள்ளிட்ட 3 பேர் கைது

மாமல்லபுரம், வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்ற வக்கீல் உள்ளிட்ட 3 பேர் கைது செய்தனர்.
வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்ற வக்கீல் உள்ளிட்ட 3 பேர் கைது
Published on

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிராமத்தில் ஒரு வீட்டில் பெண் உள்ளிட்ட 5 பேர் வாடகைக்கு தங்கியிருந்து கஞ்சா விற்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குப்புசாமி, வெங்கடேசன் மற்றும் போலீசார் அந்த வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு இருந்தவர்கள் வீட்டை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அங்குள்ள பக்கிங்காம் கால்வாய் ஓரத்தில் உள்ள புதர் அருகில் மறைந்து இருந்து கஞ்சா விற்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்தபோது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் பல மாதமாக கஞ்சா விற்பதை ஒப்பு கொண்டனர். அவர்கள் வேலூர் மாவட்டம் மேல்மங்கலகுப்பம் பகுதியை சேர்ந்த சரவணகுமார் (வயது 46), திருப்போரூர் அடுத்த இளவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த டேனியல் (21), சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த இளம்பெண் குணா (27) என்பது தெரியவந்தது. வக்கீல் படிப்பு முடித்த சரவணகுமார் கடந்த 1998-ம் ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்து வேலூர் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்துள்ளார். குணா 6 மாதத்திற்கு முன்னர் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து கஞ்சா வியாபாரி பாக்கியராஜுடன் வசித்து வந்தார். போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றினர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com