தாலிக்கு தங்கம் திட்டம்: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 797 பேர் பயன் அடைந்துள்ளனர்; கலெக்டர் தகவல்

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 1,501 பயனாளிகளுக்கு ரூ.42.50 கோடி நிதி உதவியும் 66.644 கிலோகிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
தாலிக்கு தங்கம் திட்டம்: காஞ்சீபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 797 பேர் பயன் அடைந்துள்ளனர்; கலெக்டர் தகவல்
Published on

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு திருமண உதவி திட்டங்களின் கீழ் திருமாங்கல்யத்திற்கு வழங்கப்பட்ட தங்கம் 4 கிராமில் இருந்து 8 கிராமாக கடந்த மே 2016-ம் ஆண்டு முதல் அதிகரித்து வழங்கப்படுகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு 2016-ல் இருந்து 2020-ம் ஆண்டு வரை ரூ.25 ஆயிரம் நிதியுதவியுடன் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10,296 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 74 லட்சம் நிதியுதவியும், 80.392 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. பட்டம், பட்டயம் படித்த ஏழை பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியுடன் தலா 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 1,501 பயனாளிகளுக்கு ரூ.42.50 கோடி நிதி உதவியும் 66.644 கிலோகிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 27 ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ரூ.9 லட்சம் ஓய்வூதியம், 20 திருநங்கைகளுக்கான சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் ரூ.5.5 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு திட்டங்களில் மாதாந்திர ஓய்வூதியத்தொகை ரூ.1000-ஆக உயர்த்தப்பட்டதில், 1 லட்சத்து 75 ஆயிரத்து 940 பேர் பயனடைகின்றனர். பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 7,913 பெண் குழந்தைகளுக்கு ரூ.19 கோடியே 79 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் 621 பள்ளிகளில் 5 வயது முதல் 14 வயது வரை பயிலும் 58,155 மாணவ- மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com