

மும்பை,
மும்பை கப்பரடேயை சேர்ந்த ஒருவருக்கு சம்பவத்தன்று வங்கி ஊழியர் என கூறிக்கொண்டு ஒருவர் போன் செய்தார். அவர், கடன் அட்டையை புதுப்பிப்பதாக கூறி, அந்த நபரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரத்தை அபேஸ் செய்தார்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம், பைகானரில் உள்ள நவுகாவை சேர்ந்த அம்ரித்சிங் ராஜ்புரோகித் (வயது25) என்பவர் தான் வங்கி ஊழியர் போல பேசி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற மும்பை போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அவர் வங்கி ஊழியர் போல பேசி பலரிடம் இதே பாணியில் ரூ.13 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.